விளையாட்டு

இந்தியா – பங்களாதேஷ் இன்று மோதல்

17 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு வந்துள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் ‘டாப்-2’ இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். 

இந்த நிலையில் துபாயில் இன்று நடக்கும் ‘சூப்பர் 4’ சுற்றின் 4 ஆவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது. 

இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் போட்டியில் இதுவரை 17 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16 இல் இந்தியாவும், ஒரு போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றுள்ளன. 

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு, 

இந்தியா – அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (அணி தலைவர்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி. 

பங்களாதேஷ் – சைப் ஹசன், தன்சித் ஹசன், லிட்டான் தாஸ் (அணி தலைவர்), தவ்ஹித் ஹிரிடாய், ஷமிம் ஹூசைன், ஜாக்கர் அலி, மெஹிதி ஹசன், நசும் அகமது, தஸ்கின் அகமது, தன்சிம் ஹசன், முஸ்தாபிஜூர் ரகுமான்.

What's your reaction?

Related Posts

இந்திய – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று

சுற்றுலா இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் தமது இரண்டாம் இன்னிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி நேற்றைய இரண்டாம்…