இலங்கை

முதியோருக்கான கொடுப்பனவு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

முதியோருக்கான கொடுப்பனவு பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும் பயனாளர்களின் எண்ணிக்கையை 10 இலட்சம் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதியமைச்சர் வசந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனூடாக சுமார் 08 இலட்சம் பேருக்கு இதுவரை வழங்கப்பட்ட 3,000 ரூபா முதியோர் கொடுப்பனவு 5,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…