விளையாட்டு

இலங்கைக்கு மேலும் இரு வெண்கலப் பதக்கங்கள்

இந்த ஆண்டு உலக பாரா தடகள செம்பியன்ஷிப்பில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிரதீப் சோமசிறி, T47 பிரிவில் 1,500 மீட்டர் ஓட்டப்போட்டியில் 3.53.7 வினாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கம் வென்று ஆசிய சாதனை படைத்துள்ளார். 

அத்துடன் அணித் தலைவர் நுவான் இந்திக கமகே, T44 பிரிவில் நீளம் தாண்டுதலில் 6.46 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார். 

உலக பாரா தடகள செம்பியன்ஷிப் போட்டி இந்தியாவின் புது டெல்லியில் இடம்பெற்றதுடன், இதில் 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த உலக தரவரிசையில் முன்னிலையில் உள்ள 1,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். 

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 05 விளையாட்டு வீரர்கள் 09 போட்டிகளில் பங்கேற்றிருந்தனர்.

What's your reaction?

Related Posts

பயிற்சியாளர் ஆகிறார் சுரேஷ் ரெய்னா?

18 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20…