விளையாட்டு

முதல் இடத்தில் முகமட் சிராஜ்

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று விட்டது. 

இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2 ஆவது டெஸ்ட் இன்று (14) முடிவடைகிறது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு 121 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

நேற்று (13) 4 ஆவது ஆட்ட நேர முடிவில் இந்தியா 63 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இந்திய அணி வெற்றி பெற இன்னும் 58 ஓட்டங்கள் தேவையாக உள்ளது. 

இந்நிலையில் இந்த தொடரில் சிராஜ் முதல் டெஸ்டில் 7 விக்கெட்டும் 2 ஆவது டெஸ்டில் 3 விக்கெட்டும் வீழ்த்தி இந்த ஆண்டில் 8 போட்டிகளில் விளையாடிய சிராஜ் 38 விக்கெட்டுகளை பெற்றுள்ளார். 

இதன்மூலம் இந்த ஆண்டில் டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரரானார். இவருக்கு அடுத்தப்படியாக ஜிம்பாப்வே அணியை சேர்ந்த முசரபானி 36 விக்கெட்டுடன் 2 ஆவது இடத்தில் உள்ளார். 

அதனை தொடர்ந்து ஸ்டார்க் (29), நாதன் லயன் (24), ஜோமல் வாரிகன் (23) என அதற்கு அடுத்த இடத்தில் உள்ளனர்.

What's your reaction?

Related Posts

குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 56 ஆவது லீக் ஆட்டம் மும்பையில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. நாணய சழற்சியில் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை 20 ஓவரில் 155 ஓட்டங்களை…