இலங்கை

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுவன் கைது!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் ஒருவரை நேற்று (16) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மாவட்டத்தில் உள்ள பிரதேசம் ஒன்றில் சம்பவ தினமான நேற்று அதிகாலை குறித்த சிறுமி அறையில் இருந்து காணாமல் போயுள்ள நிலையில், அவரை தேடிய போது, வீதியில் இளைஞன் ஒருவருடன் இருப்பதை கண்டு இருவரையும் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். 

இதனையடுத்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவனை கைது செய்ததுடன், குறித்த சிறுமி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் பெண்கள் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…