இலங்கை

கொழும்பு துறைமுகத்தில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு

கொழும்புத் துறைமுகத்தில் உள்ள அதானி முனையத்தின் (Adani Terminal) கப்பல்துறைக்கு (Jetty) அருகில் கடலில் சடலம் ஒன்று கிடப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கொழும்புத் துறைமுகப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. 

உயிரிழந்தவர் சுமார் 5 அடி உயரம் கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது.

சடலம் அழுகிய நிலையில் அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதாகவும், அவர் நீல நிற ஜீன்ஸ் காற்சட்டை அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

நீதவான் விசாரணையின் பின்னர் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…