கிரிக்கட்விளையாட்டு

பஞ்​சாப் அணியில் இணைந்த இந்திய முன்னாள் வீரர்

அடுத்த ஆண்டுக்கான இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் பஞ்​சாப் கிங்ஸ் அணி, இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் வீரர் சாய்​ராஜ் பஹுதுல்வை சுழற்​பந்து வீச்சு பயிற்​றுவிப்பாளராக நியமித்​துள்​ளது. 

பஞ்​சாப் கிங்ஸ் அணி​யில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் சுனில் ஜோஷி, சுழற்​பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக செயல்​பட்டு வந்தார். 

இந்நிலை​யில் தற்​போது அவர், நீக்​கப்​பட்டு 52 வயதான சாய்​ராஜ் பஹுதுல் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். 

அவர், இந்​திய அணிக்​காக 2 டெஸ்ட், 8 ஒரு​நாள் போட்​டிகளில் விளை​யாடி உள்​ளமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் அணி அமெரிக்கா செல்லுமா? இறுதி முடிவு எப்போது?

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவிருக்கும் இவ்வாண்டு உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் ஈரான் அணி தேசிய கால்பந்தாட்ட அணி பங்கேற்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின்…