இலங்கை

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது!

ஏறாவூர் பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை நிலையமாக செயற்பட்டு வந்த வீடு ஒன்றை பொலிஸார் நேற்று (26) முற்றுகையிட்டு பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். 

இதன்போது அந்த பெண்ணிடம் இருந்து 5350 மில்லி கிராம் ஜஸ் போதைப்பொருளும், போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் 3 இலட்சத்து 61 ஆயிரம் ரூபாய் பணத்தையும் மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். 

மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து ஏறாவூர் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் ஏறாவூர் முதலாம் பிரிவிலுள்ள கலைமகள் பாடசாலை வீதிக்கு அருகில் இருந்த இந்த வீட்டை முற்றுகையிட்டிருந்தனர். 

இதன்போது நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 56 வயதான பெண் வியாபாரியே கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரை இன்றைய தினம் (27) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…