No products in the cart.
மீன்பிடிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி பலி!
ரஸ்நாயக்கபுர பொலிஸ் பிரிவில் உள்ள முடத்தவ ஆற்றில் ஒருவர் மூழ்கி உயிரிழந்தார்.
இறந்தவர் மொன்னேக்குளம பகுதியைச் சேர்ந்த 68 வயதானவர் என தெரியவந்துள்ளது.
குறித்த நபர் குழாயைப் பயன்படுத்திய மீன்பிடிப்பவர் என்பதுடன், அவர் வீடு திரும்ப தாமதமானதால் குடியிருப்பாளர்கள் அவரைத் தேடியபோது ஆற்றின் நடுவில் அவரது சடலம் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் நிக்கவெரட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ரஸ்நாயக்கபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
















