இலங்கை

அதிவேக வீதி பாதுகாப்புப் பணிகள் “ரக்னா லங்கா” நிறுவனத்திற்கு?

இலங்கையின் அதிவேக வீதி பாதுகாப்பு நடவடிக்கைப் பணிகளை “ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம்” வசம் ஒப்படைக்க பாதுகாப்பு அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது. 

அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக அண்மையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

நாட்டின் அதிவேக வீதி வலையமைப்பின் முழுமையான பாதுகாப்பையும் செயல்திறனையும் மேம்படுத்துவதற்காக, “ரக்னா லங்கா” நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை மதிப்பிடுவது மற்றும் தற்போதுள்ள பாதுகாப்பு கட்டமைப்பை மதிப்பீடு செய்வது குறித்து அந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டது. 

ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்தாஆகியோரின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல்கள் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது, ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களின் விதவைகள் மற்றும் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கான ஓய்வூதியத் திட்டத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. 

ஓய்வூதியத் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் அதிகாரிகள், நிலவும் நிர்வாக சவால்களை மீளாய்வு செய்தனர். அத்துடன், குறித்த பயனாளிகளுக்கு சலுகைகள் தாமதமின்றி விரைவாகக் கிடைப்பதை உறுதி செய்வதற்கான ஒரு திட்டத்தை வகுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…