இலங்கை

யட்டியந்தோட்டையில் கொதிகலன் வெடித்ததில் ஒருவர் பலி

யட்டியந்தோட்டை பகுதியில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். 

யட்டியந்தோட்டை – கிருபொருவ தோட்டத்தில் இயங்கும் தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. 

குறித்த சம்பவத்தில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ருவான்வெல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…