இலங்கை

மாலைத்தீவில் 300 கிலோ போதைப்பொருட்களுடன் இலங்கை படகு பறிமுதல்

மாலைதீவு கடற்பரப்பில் போதைப்பொருள் கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில் இலங்கையின் பல நாள் மீன்பிடி படகு ஒன்று அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கை பாதுகாப்பு நிறுவனங்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுவைச் சேர்ந்தகவர்களுடையது என நம்பப்படும் சுமார் 300 கிலோகிராம் போதைப்பொருள், படகில் கொண்டு செல்லப்பட்டது.

படகில் இருந்த பல மீனவர்களையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க இலங்கை பொலிஸார் மற்றும் கடற்படை அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழு மாலைத்தீவுக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…