இலங்கை

கடும் இடி மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் கடும் இடிமின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பு இன்று (13) இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும்போது கடும் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக அத்திணைக்களம் மேலும் கூறியுள்ளது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, அந்தப் பகுதிகளில் தற்காலிகமான பலத்த காற்று வீசக்கூடும். 

இடிமின்னல் காரணமாக ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…