இலங்கை

மனைவியைக் கொன்று கணவன் தற்கொலைக்கு முயற்சி

வாகரை, உரியன்கட்டு பிரதேசத்தில் திருமணமான இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 22 வயதுடைய தட்டுமுனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். 

நேற்று (17) மாலை மனைவி மற்றும் கணவனுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, கணவன் மின்விசிறி வயரினால் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலையைச் செய்துள்ளமை தெரியவந்துள்ளது. 

அதன் பின்னர் கணவன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ள நிலையில், அவர் தற்போது மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

25 வயதுடைய சந்தேகநபர் வைத்தியசாலையில் இருக்கும்போதே கைது செய்யப்பட்டு, பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…