இலங்கை

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கணவனின் சடலமும் மீட்பு

வெலிமடை, போரலந்த, கந்தேபுஹுல்ப்பொல பிரதேசத்தில் வௌ்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த ஆணின் சடலமும் தற்போது மீட்கப்பட்டுள்ளது. 

நேற்று (17) மாலை வெலிமடைப் பிரதேச செயலாளர் பிரிவில் பெய்த அதிக மழை காரணமாக ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கில் சிக்கி தம்பதியினர் காணாமல் போயிருந்தனர். 

நேற்று இரவு முழுவதும் பிரதேசவாசிகளால் இந்தத் தம்பதியினரைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, மனைவியின் சடலம் முதலில் மீட்கப்பட்டது. தற்போது காணாமல் போயிருந்த கணவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 32 வயதுடைய மனைவியும், 37 வயதுடைய அவரது கணவரும் ஆவர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…