இலங்கை

கடுகன்னாவ மண்சரிவு பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மற்றுமொரு நபரின் சடலம் சற்றுமுன்னர் மீட்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த மண்சரிவு அனர்த்தத்தில் இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ளது.

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மேலும் இருவரின் சடலங்கள் சற்றுமுன்னர் மீட்கப்பட்டுள்ளன. 

இதன்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. 

அதேநேரம் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். 

எவ்வாறாயினும் தொடர்ந்தும் பாதுகாப்பு படையினர், பொலிஸார், அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மீட்பு பணிகளை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…