கிரிக்கட்விளையாட்டு

பாகிஸ்தானுக்கு இலங்கை நிர்ணயித்த இலக்கு!

பாகிஸ்தான் – ராவல்பிண்டியில் இடம்பெறும் முத்தரப்பு இருபதுக்கு 20 தொடரின் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மோதிவருகின்றன.


போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஜனித் லியனகே ஆட்டமிழக்காது 41 ஓட்டங்களையும், குசல் பெரேரா 25 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர். 

பாகிஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சில் மொஹமட் நவாஸ் 4 ஓவர்கள் பந்து வீசி 16 ஓட்டங்களை வழங்கி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்நிலையில் 129 என்ற வெற்றியிலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி பதிலுக்கு துடுப்பாடவுள்ளது.

What's your reaction?

Related Posts

குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 56 ஆவது லீக் ஆட்டம் மும்பையில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. நாணய சழற்சியில் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை 20 ஓவரில் 155 ஓட்டங்களை…