இலங்கை

பருவநிலை மாற்றத்தால் பாதித்த நாடுகளுக்கு கூடுதல் நிதி

ஐ.நா. பரு​வநிலை தொடர்​பான உச்சி மாநாடு பிரேசிலில் கடந்த 10ஆம் திகதி ஆரம்பமானது. 

இதில், பருவநிலை மாற்றத்தால் பாதித்த நாடு​களுக்கு கூடு​தல் நிதி வழங்குவதற்கான ஒப்​பந்​தம் அமை​தி​யான முறை​யில் மேற்கொள்​ளப்​பட்​டது. 

ஆனால், இந்த ஒப்​பந்​தத்​தில் புதை படிவ எரிபொருட்​களை படிப்படி​யாக குறைப்பதற்​கான அல்​லது போது​மான அளவு கார்பன் உமிழ்வு குறைப்பு திட்​டங்​களை வலுப்​படுத்​து​வதற்​கான வெளிப்​படை​யான வரைவு திட்​டம் எது​வும் இடம்​பெற​வில்​லை என தெரிவிக்கப்படுகிறது. 

புதை படிவ எரிபொருட்​களில் இருந்து வில​கிச் செல்​வதற்​கான திட்​டங்​கள் குறித்து அறி​விப்​பு வெளி​யிடப்​ப​டாதது சுற்​றுச்​சூழல் ஆர்​வலர்​களிடையே ஏமாற்​றத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. 

சிஓபி 30 தலை​வர் கூறுகை​யில், “பெலேமில் தொடங்​கப்​பட்ட விவாதங்​கள் அடுத்த வரு​டாந்​திர மாநாடு வரை பிரேசிலின் தலை​மை​யில் தொடரும். 

புதை படிவ எரிபொருள் மாற்​றுத் திட்​டம் நாங்​கள் இப்​போது அங்​கீகரித்த உரை​யில் இடம்​பெற​விட்​டாலும் பின்​னர் எனது குழு​வால் வெளியிடப்​படும் ஒரு தனித்​திட்​டத்​தில் அது இடம்​பெறும்​” என்றார்​.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…