இலங்கை

பேரிடர் நிலை – வரவு செலவுத் திட்ட விவாதம் ஒத்திவைப்பு

பேரிடர் நிலைமை காரணமாக, வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தை நாளை மற்றும் சனிக்கிழமைகளில் நிறுத்தி வைக்க கட்சித் தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக எதிர்க்கட்சியின் தலைமை கொறடா கயந்த கருணாதிலக தெரிவித்தார். 

சில அரசாங்க அலுவல்களைக் கவனிப்பதற்காக, சபை நாளை சிறிது நேரத்திற்கு கூட்டப்படும். 

இருப்பினும்,  இந்த இரண்டு நாட்களை ஈடுசெய்யும் வகையில் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் டிசம்பர் முதலாம் திகதி மற்றும் டிசம்பர் இரண்டாம் திகதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…