No products in the cart.
மழையுடனான வானிலை நாளை முதல் குறைவடையக்கூடும்
“டிட்வா புயலானது நேற்றிரவு 11.30 மணியளவில் திருகோணமலையிலிருந்து 70 கி.மீ வடமேற்கே மையம் கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது வடக்கு நோக்கிச் சாய்ந்த வடமேற்குத் திசையில் நகர்ந்து, நவம்பர் 30ஆம் திகதியளவில் இந்தியாவின் தமிழ்நாடு கடற்கரையை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை நாளை (30) முதல் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடமேல் மாகாணங்களில் தொடர்ச்சியான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் மணிக்கு 60-70 கி.மீ. வரை பலத்த காற்று வீசுவதுடன் இடைக்கிடையே மணிக்கு 80-90 கி.மீ. வரை காற்று அதிகரித்து வீசும் என கூறப்படுகின்றது.
பலத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக ஏற்படும் ஆபத்துக்களைக் குறைப்பதற்கான தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.














