இலங்கை

புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மற்றும் இந்தோனேசியாவுக்கு, ஸ்டார்லிங்க் இலவச இணைப்பு

இலங்கை மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகள் புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்டார்லிங்க் இலவச இணைப்பை வழங்குகிறது.

இரு நாடுகளிலும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் டிசம்பர் வரை பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கும் இலவச சேவையை வழங்குவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

உட்கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் டெர்மினல்களை விரைவாக நிலைநிறுத்தவும் இணைப்பை மீட்டெடுக்கவும் இந்தோனேசிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாக ஸ்டார்லிங்க் தெரிவித்துள்ளது.

இலங்கையிலும் ஸ்டார்லிங்க் நிறுவனம் அதிக ஆதரவு வழங்க அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து செயற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் எந்தவொரு நடவடிக்கையையும் இன்றி இலவச சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைநிறுத்தப்பட்ட வாடிக்கையாளர்களும் சேவைகளை பெறுவார்கள், இதனால் அவர்கள் உடனடியாக தங்கள் இணைப்புகளை மீண்டும் செயற்படுத்த முடியும்.

புதிய வாடிக்கையாளர்கள் இலவச சேவைக்கு தகுதி பெற, “இந்தோனேசியா வெள்ள ஆதரவு” அல்லது “இலங்கை வெள்ள ஆதரவு” என்று ஆதரவு டிக்கெட் சமர்ப்பிக்க வேண்டும்.

பின்னர் இலவச இணையச் சேவை தொடர்பான விபரங்களை பயனர் கணக்கின் பில்லிங் பிரிவில் பார்வையிட முடியும்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…