இலங்கை

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் விசேட அறிவிப்பு

தற்போது சந்தையில் போதுமான எரிவாயு கையிருப்பு இருப்பதாகவும், நிரப்பும் நடவடிக்கைகள் தடையின்றி இடம்பெற்று வருவதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 

போக்குவரத்து சிரமங்கள் இல்லாத பகுதிகளில் எரிவாயு விநியோகம் வழமைபோல் நடைபெறுவதாகவும், வீதிச் சிரமங்கள் நிலவும் பகுதிகள் வழமைக்குத் திரும்பியவுடன் அப்பகுதிகளுக்கும் எரிவாயு விநியோகத்தை வழங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன், உங்கள் பிரதேசத்தின் தற்போதைய எரிவாயு விநியோகம் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள 1311 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறும் லிட்ரோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு மேலும் அறிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…