இலங்கை

மரக்கறிகளின் விலை சடுதியாக உயர்வு

நாட்டில் ஏற்பட்ட பேரிடர் நிலமைக்கு பின்னர் மரக்கறிகளின் விலை சடுதியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிர் நிலங்கள் மற்றும் உற்பத்தி பொருட்கள் சேதமடைந்த நிலையில், மரக்கறிகளின் விலை சடுதியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, லீக்ஸ் ஒரு கிலோ 2800 ரூபாவிற்கும், கெரட் ஒரு கிலோ 2800 ரூபாவிற்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 800 ரூபாவிற்கும், முள்ளங்கி ஒரு கிலோ 400 ரூபாவிற்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 3000 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக கமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், விவசாயத் துறையின் தரநிலைகளுக்கு இணங்க உறைந்த காய்கறிகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…