இலங்கை

ஊவாவில் ஒருநாள் சம்பளத்தை வழங்கும் அரச ஊழியர்கள்

ஊவா மாகாண சபையின் அரச உத்தியோகத்தர்கள், தமது ஒரு நாள் சம்பளத்தை அந்த மாகாணத்தின் மீள் கட்டமைப்புப் பணிகளுக்கான நன்கொடையாக வழங்கத் தீர்மானித்துள்ளனர். 

மாகாணத்திலுள்ள அனைத்து அரச உத்தியோகத்தர்களும் இதற்குத் தமது விருப்பத்தைத் தெரிவித்துள்ளதாக ஊவா மாகாண பிரதம செயலாளர் அனுஷா கோகுல பெர்னாண்டோ தெரிவித்தார். 

இதுதொடர்பாக விருப்பத்தைத் தெரிவிப்பதற்கான சுற்றறிக்கையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

‘டித்வா’ சூறாவளியினால் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டம் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…