இலங்கை

திருமணத்தில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம் – 2 சிறுவர்கள் பலி

இந்தியாவின் உத்தர பிரதேசத்தின் எட்டா மாவட்டத்தில் உள்ள உமை ஆசாத்நகர் கிராமத்தில் சனிக்கிழமை இரவு திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தின் போது துப்பாக்கி தவறுதலாக சுட்டதில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டனர். 

இசை நடனத்துடன் கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோது துப்பாக்கி வெடித்தது. 

இதில் 12 வயதான சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

அத்துடன் சம்பவத்தில் படுகாயமடைந்த 17 வயது சிறுவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்ததாக வைத்தியர்கள் அறிவித்தனர். 

துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடும் போது இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

துப்பாக்கிச் சூட்டை யார் நடத்தினர் என்பது குறித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…