இலங்கை

நிவாரணம் வழங்குவது குறித்து முறையான அறிவிப்பு இல்லை

அரசாங்கம், நாட்டில் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக தெரிவித்தாலும், தற்போது வரை எந்தவொரு நிவாரணங்களோ, இழப்பீடுகளையோ வழங்க முன்வரவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான செயல்முறைகள் மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் உள்ள அதிகாரிகள், பிரதேச செயலகங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கிராம சேவகர்களுக்கு எழுத்துப்பூர்வமாக முறையாகத் தெரிவிக்கப்படவில்லை.

ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் இழப்பீடு வழங்குவது தொடர்பாக அறிக்கைகளை வெளியிட்டிருந்தார். ஆனாலும் மாவட்ட அபிவிருத்தி குழுக்களில் அது தொடர்பில் முரணான தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளd.

மேலும், “இறப்பு சான்றிதழ்களை வழங்க விழாக்களை நடத்தியது வருந்தத்தக்கது. பாதிக்கப்பட்ட சமூகங்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சரியான நேரத்தில் நிவாரணம் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…