இலங்கை

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து – சம்பவ இடத்திலேயே பலியான தாய்

யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று காலை (20) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூளாய் பகுதியைச் சேர்ந்த தாயும் மகளும் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில், அவர்களுக்கு எதிர்திசையில் வேகமாக மோட்டார் சைக்கிள் ஒன்று வந்துள்ளது.

இதனை அடுத்து தாயும், மகளும் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர்.

இதன்போது எதிர்திசையில் பயணித்த பவுசர் ஒன்று மோதுண்டதில் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மகளும் இதன்போது காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…