இலங்கை

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இளம் வர்த்தகர் கைது – விசாரணை தீவிரம்!

வெளிநாட்டு சிகரெட் தொகையொன்றை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவந்து, அவற்றை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் சென்றுகொண்டிருந்த இலங்கையர் ஒருவர் இன்று (21) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அவிசாவளை, எபலபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய வர்த்தகர் ஒருவராவார். 

சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதி மற்றும் 03 பெட்டிகளுக்குள், வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ‘பிளாட்டினம்’ ரகத்தைச் சேர்ந்த 42,000 சிகரெட்டுகள் அடங்கிய 210 சிகரெட் காட்டூன்கள்  மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ளது. 

குறித்த சிகரெட் தொகை விமான நிலைய அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதுடன், அதன் பெறுமதி சுமார் 63 இலட்சம் ரூபா என அதிகாரிகள் தெரிவித்தனர். 

சந்தேக நபர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜனவரி மாதம் 07 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…