இலங்கை

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 தமிழக மீனவர்கள் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழ் நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் அவர்கள் இன்று (23) கைது செ்யயப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களின் படகொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் இடையே மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட இழுவைப் படகு தங்கச்சிமடம், மாந்தோப்புவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…