இலங்கை

இலங்கையில் கைதான இந்திய மீனவர்கள் மீண்டும் விளக்கமறியலில்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நெடுந்தீவு மற்றும் காரைநகர் கடற்பரப்புகளில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 23 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர். 

கடந்த டிசம்பர் 27, ஜனவரி 2 மற்றும் ஜனவரி 3 ஆம் திகதிகளில் கடற்படையினால் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். 

இந்நிலையில் சந்தேகநபர்கள் இன்று (7) காலை சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

இதனையடுத்து, அவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…