இலங்கை

கண்டி-கொழும்பு வீதியில் கடவத்தை பகுதியில் போக்குவரத்து மட்டு: பயணிகள் பாதிப்பு!

கட்டுமானப் பணிகள் காரணமாக கொழும்பு – கண்டி வீதியின் கடவத்தை பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கொழும்பு – கண்டி வீதியில் பண்டாரவத்தை, புவக்பிட்டிய பகுதியில் வீதியின் ஒரு மருங்கு மூடப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி வரை இந்த வீதி மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடவத்தை – மீரிகம அதிவேக இடமாறல் கட்டுமானப் பணிகள் காரணமாகவே இந்த போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

மாற்று வழியாக, கடவத்தை நகர மத்தியிலுள்ள மின்சிக்னல் சந்தியில் இருந்து அதிவேக வீதிப் பிரவேச வீதி ஊடாக எல்தெனிய மின்சிக்னல் சந்தி வரையிலான வீதியைப் பயன்படுத்த முடியும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…