இலங்கை

2026-இன் முதல் 25 நாட்களில் 223,645 சுற்றுலாப் பயணிகள் வருகை


2026 ஆம் ஆண்டு ஆரம்பமான முதல் 25 நாட்களில் 223,645 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

குறித்த காலப்பகுதியில், ஒரே நாளில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை ஜனவரி 15 ஆம் திகதி பதிவாகியுள்ளதுடன், அன்றைய தினம் 10,483 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் அதிகார சபை கூறுகிறது. 

இந்த 25 நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். 

அந்த எண்ணிக்கை 41,603 ஆகும். 

இதற்கு மேலதிகமாக, ரஷ்யாவிலிருந்து 22,876 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 23,329 பேரும், ஜேர்மனியிலிருந்து 14,431 பேரும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…