இலங்கை

அழகிப் போட்டியில் இலங்கைக்கு மூன்றாம் இடம்!

அமெரிக்காவில் நடைபெற்ற 41-வது உலகத் திருமதி அழகிப் போட்டியில் தாய்லாந்துப் போட்டியாளர் மகுடம் சூடியுள்ளார். 

இப்போட்டி இலங்கை நேரப்படி இன்று (30) காலை நிறைவடைந்தது. 

இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் கலந்துகொண்ட சபீனா யூசுப், இறுதிச் சுற்றின் முதல் மூன்று இடங்களுக்குள் தெரிவானதுடன், அவருக்கு மூன்றாம் இடம் கிடைத்தது. 

போட்டியை நடத்திய நாடான அமெரிக்காவின் போட்டியாளர் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 

இப்போட்டியில் உலகின் 60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்துகொண்டனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…