இலங்கை

உனாகுறுவே சாந்த’வின் சகா கைது

அளுத்கம புகையிரத நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த நபரொருவரைச் சோதனையிட்ட போது, அவரிடமிருந்து சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான 500 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளைக் கைப்பற்ற களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

தென் மாகாணத்தைச் சேர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘உனாகுறுவே சாந்த’  என்பவரால் அளுத்கம மற்றும் வெலிப்பன்ன ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு குறித்துக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. 

சந்தேகநபர் குறித்த போதைப்பொருளை வேறு ஒருவருக்குக் கையளிப்பதற்காகவே அங்கு காத்திருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. 

கைது செய்யப்பட்டவர் 22 வயதுடைய கிந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்தவர். 

விசாரணைகளின் போது, சந்தேகநபர் ‘உனாகுறுவே சாந்த’ என்பவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்துள்ளமை தெரியவந்துள்ளது. 

இக்கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கையடக்கத் தொலைபேசி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

சந்தேகநபரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி, மேலதிக விசாரணைகளுக்காகத் தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…