இலங்கை

துப்பாக்கி மாயமான சம்பவம் – 2 பொலிஸ் அதிகாரிகள் கைது

மத்துகம பொலிஸ் நிலையத்தில் தோட்டாக்களுடன் கைத்துப்பாக்கி ஒன்று காணாமல் போன சம்பவம் தொடர்பில் அந்த பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மத்துகம பொலிஸ் நிலையத்தில் இருந்த கைத்துப்பாக்கி ஒன்றும் 10 தோட்டாக்களும் காணாமல் போனதாக நேற்று (1) அறிவிக்கப்பட்டது. 

மத்துகம பொலிஸ் நிலையத்தின் உப சேவைப் பொறுப்பில் இருந்த கைத்துப்பாக்கியும், 10 தோட்டாக்கள் அடங்கிய மெகஸின் ஒன்றுமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

ஆவணங்களைப் பரிசோதித்த போதே, கடந்த ஜனவரி 26 ஆம் திகதி முதல் அவை காணாமல் போயுள்ள விடயம் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பில் மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…