இலங்கை

கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை நீர்வெட்டு

கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (08) முற்பகல் முதல் 22 மணிநேர நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

நாளை (08) சனிக்கிழமை காலை 6.00 மணி முதல் மறுநாள் (09) அதிகாலை 4.00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக அச்சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதன்படி, அஸ்கிரிய (மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதி), வேகிரிய, பல்லேமுல்ல (புதிய மற்றும் பழைய), யடிஹலகல, கொண்டதெனிய, ரஜபிஹில்ல சேவை நீர்த்தேக்கம், மெதவல (பழைய) சேவை நீர்த்தேக்கம் ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது. 

அதேபோல், கஹவத்த, குருகொட, புலுகொஹதென்ன, கிராகடுவ, கஹல்ல, தெலம்புகஹவத்த, நுகவெல, பலனகல, மெதவல (புதிய) சேவை நீர்த்தேக்கம், கலகெதர மற்றும் மாவத்தகம ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது. 

நீர் விநியோகம் தடைப்படுவதால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…