இலங்கை

பனை மரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

பொன்னாலைச் சந்தியில் இருந்து மாதகல் நோக்கி மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்துக்கொண்டிருந்தனர். 

இதன்போது, வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியோரத்தில் இருந்த பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

மற்றவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

உயிரிழந்தவரின் சடலம் தற்போது காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…