இலங்கை

பெண் வழங்கிய தகவல்: கல்கிசையில் பாரிய சுற்றிவளைப்பு!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபர் (பெண்) ஒருவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஐஸ் போதைப்பொருள், துப்பாக்கி மற்றும் போலி இலக்கத் தகடுகள் உள்ளிட்ட பல பொருட்களைக் கல்கிஸ்ஸ பொலிஸ் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தினால் கைது செய்யப்பட்ட இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் சந்தேகநபர் ஒருவர் இவ்வாறு தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

அந்தச் சந்தேகநபரிடமிருந்து வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நேற்று (11) மாலை விசாரணை அதிகாரிகளால் கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரிவென வீதிப் பகுதியிலுள்ள வீடொன்று சோதனையிடப்பட்டது.

அந்த வீட்டில் இருந்து,

  • 10 கிராம் 260 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 8 இலட்சம் ரூபா பணம்
  • துப்பாக்கி ஒன்று
  • தோட்டா ஒன்று
  • மோட்டார் சைக்கிள்களுக்குப் பயன்படுத்தப்படும் முன் மற்றும் பின் பக்க போலி வாகன இலக்கத் தகடுகள் 08
  • முச்சக்கர வண்டி முன் மற்றும் பின் பக்க போலி இலக்கத் தகடுகள் 04
  • மோட்டார் வாகன முன் மற்றும் பின் பக்க போலி இலக்கத் தகடுகள் 18
  • இலத்திரனியல் தராசு ஒன்று
  • தங்க சங்கிலிகள் 02
  • தங்க வளையல் ஒன்று
  • தங்க மோதிரம் ஒன்று

என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேற்கண்ட சொத்துக்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவரிடமிருந்து இந்தச் சந்தேகநபருக்கு கிடைத்துள்ளமை தற்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…