இலங்கை

பட்டாசு தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து: ஊழியர் ஒருவர் படுகாயம்!

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆடியம்பலம பிரதேசத்தில் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் அதன் ஊழியர் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (11) நண்பகல் இந்த திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர் மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவராவார்.

பின்னர் கட்டுநாயக்க பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தனர்.

எவ்வாறாயினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…