இலங்கை

காத்தான்குடி முதல் கல்லடி வரை வெள்ளக்காடு

கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதுடன், இன்று (19) காலை முதல் கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதாக ‘அத தெரண’ செய்தியாளர்கள் தெரிவித்தனர். 

பலத்த மழை காரணமாக காத்தான்குடி, பூநொச்சிமுனை, நாவலடி, கல்லடி உள்ளிட்ட பல பகுதிகளில் நாளாந்த நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சாதாரண மக்கள் வாழ்க்கையும் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படுவதால் மீன்பிடி நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 

இதன் காரணமாக மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பாரிய தடங்கல் ஏற்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் மேலும் தெரிவித்தனர். தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாக அப்பகுதியில் உள்ள பல சிறுவர் பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…