இலங்கை

சஜித் வெளியிட்ட அதிரடித் தரவுகள்!

தென்னாப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 9 ஆவது நிலக்கரி கப்பலும் தரம் குறைந்தது என்பது தரவுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஹோமாகம ஸ்ரீ கல்யாணதர்ம அபினவாராம விகாரையில் இன்று (23) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு சஜித் பிரேமதாச முக்கிய அவதானிப்புகளை முன்வைத்துள்ளார்.

நுரைச்சோலை மின் நிலையத்தின் முதல் மற்றும் மூன்றாவது அலகுகள் தலா 300 மெகாவாட் உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால், தென்னாப்பிரிக்க நிலக்கரியைப் பயன்படுத்தியபோது முதல் அலகில் 250 மெகாவாட்டும், மூன்றாவது அலகில் 275 மெகாவாட்டும் மாத்திரமே உற்பத்தியாகியுள்ளது.

இரண்டாவது அலகில் மாத்திரம் சரியாக 300 மெகாவாட் உற்பத்தியாகியுள்ளது. இதற்கு ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உயர்தர நிலக்கரி பயன்படுத்தப்பட்டதே காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்யத் தேவையான நிலக்கரியின் அளவு அதிகரித்துள்ளமை, இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் தரம் குறைவு என்பதற்குச் சான்றாகும்.

இந்த அரசாங்கம் இதுவரை தென்னாப்பிரிக்காவிலிருந்து 25 முதல் 27 கப்பல்கள் வரை நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தரம் குறைந்த நிலக்கரியை அதிக விலைக்கு வாங்குவதன் மூலம் பாரிய ஊழல் இடம்பெற்று வருவதாகக் குற்றம் சாட்டினார்.

மகா சங்கத்தினரை “கேடுகெட்டவன்” என அவமதிக்கும் இந்த அரசாங்கம், நிலக்கரி ஊழல் மூலம் மக்களுக்குப் பாரிய பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் சாடினார்.

நிகழ்நேரப் பதிவுகளின் படி இந்த மோசடி நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…