இலங்கை

கிராம உத்தியோத்தர்கள் அவசர கலந்துரையாடலுக்கு அழைப்பு!

2009/2010 ஆம் ஆண்டுகளில் கிராம உத்தியோகத்தர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களுக்காக அவசரக் கலந்துரையாடல் ஒன்றை வழங்க பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

எதிர்வரும் 27 ஆம் திகதி இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், மார்ச் மாதம் 03 ஆம் திகதி பொதுநிர்வாக அமைச்சின் முன்னால் 2009/2010 கிராம உத்தியோகத்தர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படவிருந்த அமைதிப் போராட்டத்தை அடுத்து, இந்த அவசரப் பேச்சுவார்த்தை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

தமது 17 வருடகால தர உயர்வு பிரச்சினைக்கு தீர்வு கோரி முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தமை மற்றும் அதிகாரிகள் இப்பிரச்சினையைப் புறக்கணித்து வருவதாக தெரிவித்து இப்போராட்டத்திற்குத் திட்டமிடப்பட்டது. 

இதற்கு ஏனைய அனைத்து கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்கியிருந்தன. 

2007 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து பணியில் இணைந்த 2,300 இற்கும் மேற்பட்ட தற்போது சேவையில் உள்ளவர்களில் சுமார் 25% உத்தியோகத்தர்களை இந்த ஒன்றியம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. 

தமது நியாயமான தொழில்சார் கோரிக்கைகள் வெல்லப்படும் வரை தொடர்ந்து செயற்படப் போவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…