இலங்கை

கொழும்பில் காணி விலைகளில் ஏற்றம்

கொழும்பு மாவட்டத்திற்காகத் தயாரிக்கப்பட்ட காணி மதிப்பீட்டுச் சுட்டெண், தனது அதிகரிப்புப் போக்கைத் தொடர்ச்சியாகப் பேணியவாறு, 2024ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் 10.6% இனால் வளர்ச்சியடைந்துள்ளது.

இந்த வளர்ச்சியானது, காணி மதிப்பீட்டுச் சுட்டெண்ணின் உப சுட்டெண்களான வதிவிட, வர்த்தக மற்றும் கைத்தொழில் ஆகிய மூன்று உப சுட்டெண்களிலும் பிரதிபலித்துள்ளதுடன், அவை முறையே 12.4%, 11.3% மற்றும் 8.0% வருடாந்த அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன.

இதேவேளை, 2025ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் பதிவான பெறுமதிகளுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டில், காணி மதிப்பீட்டுச் சுட்டெண் மற்றும் அதன் உப சுட்டெண்கள் அரையாண்டு அடிப்படையில் மிதமான வேகத்தில் வளர்ச்சியடைந்துள்ளன.

இதில் வர்த்தக மற்றும் வதிவிட உப சுட்டெண்கள் உயர்ந்த வளர்ச்சி வேகத்தைக் காட்டியுள்ளன.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…