இலங்கை

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. 

இதற்கமைய, இன்று (04) காலை கொழும்பு செட்டியார்தெரு தங்க சந்தையில் “22 கரட்” தங்கப் பவுண் ஒன்றின் விலை 376,500 ரூபா வரை குறைந்துள்ளது. நேற்று (03) இதன் விலை 388,500 ரூபாவாகக் காணப்பட்டது. 

இதேவேளை, நேற்று 420,000 ரூபாவாகக் காணப்பட்ட “24 கரட்” தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 407,000 ரூபா வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…