இலங்கை

சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச உணவு!

இலங்கையில் நிலவும் மோதல்கள் காரணமாக சிரமங்களை எதிர்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் கொழும்பின் கொள்ளுப்பிட்டியில் உள்ள இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நிலைமை சீரடைந்து பயணம் மீண்டும் தொடங்கும் வரை தினமும் காலை 11:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை
உணவு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த முயற்சியை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம்
மற்றும் இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவம் நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…