இலங்கை

40 இலட்சம் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

போதைக்கு முற்றுப்புள்ளி தேசிய நடவடிக்கையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட வாகனச் சோதனை நடவடிக்கையின் போது, தொடங்கொட மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரைத் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

அவரிடமிருந்து சுமார் 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, 

தொடங்கொட பகுதியில் சந்தேகத்திற்குரிய முறையில் பயணித்த ஒரு முச்சக்கரவண்டியை சோதனையிட்டபோது, அதிலிருந்த நபரிடமிருந்து சுமார் 225 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது. 

இதன் சந்தை மதிப்பு சுமார் 40 இலட்சம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கைதானவர் தொடங்கொட பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞராவார். 

கைது செய்யப்பட்ட நபர் களுத்துறை பகுதியில் இயங்கும் ஒரு பிரதான போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுகிறார். 

சந்தேகநபரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர், அவரைத் தடுப்புக்காவலில் எடுத்து விசாரணை செய்வதற்கான உத்தரவைப் பெற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…