No products in the cart.
யாழில் பேருந்துக்கு தீ வைப்பு
யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இன்று அதிகாலை பேருந்து ஒன்றிற்குத் தீ வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்து சேவையில் ஈடுபட்டு வரும் இரு தரப்பினரிடையே நிலவிய நீண்டகால முரண்பாடு காரணமாக, பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கொடிகாமம் பொலிஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
















