இலங்கை

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு சத்திரசிகிச்சை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சத்திரசிகிச்சை ஒன்றிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (19) கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

குறித்த சத்திரசிகிச்சை மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதி விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…