இலங்கை

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட சிறுமி பலி

மரதன்கடவல, ஹினுக் கிரியாவ குளத்தில் நீராடச் சென்ற சிறுமியொருவர் நேற்று (19) நண்பகல் முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக மரதன்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறு உயிரிழந்தவர் கணேவல்பொல பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய சிறுமியாவார். 

அவர் தனது பாட்டியுடன் குறித்த குளத்தில் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார். 

இச்சம்பவத்தைத் தொடர்ந்து கிராமவாசிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இணைந்து குளத்தில் தேடுதல் நடத்திய போது, முதலை அச்சிறுமியை விட்டுவிட்டுச் சென்றுள்ளது. 

எனினும், குறித்த சிறுமி மரதன்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…