கனடா

புலம்பெயர்தல் கனடாவின் மக்கள்தொகையில் ஏற்படுத்தியுள்ள தாக்கம்

கனடாவில், தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்ததால், கனடாவின் மக்கள்தொகை கணிசமான அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக கனடா புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டில், கனடாவின் மக்கள்தொகை 100,000க்கும் அதிகமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. 

கல்வி மற்றும் பணி அனுமதி பெற்று கனடாவில் தற்காலிகமாக வாழ்வோர் எண்ணிக்கை குறைந்ததே, கனடாவின் மக்கள்தொகை குறைய காரணமாக அமைந்துள்ளது.

விடயம் என்னவென்றால், கனடாவில் பிறப்பு வீதம் குறைவாக உள்ளது. சொல்லப்போனால், 2025 அக்டோபர் முதல் 2026 ஜனவரி வரையிலான காலகட்டத்தில், பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையைவிட, இறந்தவர்கள் எண்ணிக்கை 781 கூடுதலாக உள்ளது.

ஆக, மக்கள்தொகையில் இந்த இடைவெளியை ஈடு செய்ய புலம்பெயர்தல்தான் உதவியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…